வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் இயலிசை முயற்சியின் முதல் தொகுப்பாக, கடவுள் வாழ்த்து போன்று, பத்து திருப்புகழ் பாடல்களை வெளியிட்டுள்ளோம். அருணகிரிநாதர் பிறந்த திருவண்ணாமலை அருணகிரிநாதர் திருக்கோயிலில் 14-September-2020 திங்கள் அன்று காலை ஒரிசா பாலு ஐயா முன்னிலையில் பாடல் வெளியீடு நடை பெற்றது. இதன் பிறகு, புறநானூறு, கலிங்கத்துப்பரணி போன்றவைகள், இயலிசை பாகம்-2, இயலிசை பாகம்-3, என்ற தலைப்பில் வெளிவரும். என்பதனை உங்களிடம் அன்போடு பகிர்ந்து கொள்கிறோம்.
இசையமைத்துப் பாடியவர் – பாண்டிச்சேரி ப.சம்பந்தம் குருக்கள் | தயாரிப்பு – வள்ளுவர் வள்ளலார் வட்டம்
யாழிசை – பண்ணப்பட்டு S.வெங்கடேசன் | முழவிசை – சென்னை K.மாதேஷ்வரன் | முகர்சிங் – சிதம்பரம் S.ராஜேந்திரன் | ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் இயக்கம் – ரோஹித் சுப்பிரமணியனின் | டேடிரீமர்ஸ் கிரியேஷன்ஸ்
அகர முதலென (திருப்புகழ் – 1124), இராகம் – பந்துவராளி
புவிக்குன் பாதம் (திருப்புகழ் – 1179), இராகம் – ரேவதி
பழுது அற ஓதி (திருப்புகழ் – 1174), இராகம் – ஆனந்தபைரவி
தோல் எலும்பு (திருப்புகழ் – 715), இராகம் – சிந்துபைரவி
சந்தம் புனைந்து (திருப்புகழ் – 1238), இராகம் – மோகனம்
அமுதினை மெத்த (திருப்புகழ் – 788 ), இராகம் – தர்பாரி கானடா
பாணிக்கு உட்படாது (திருப்புகழ் – 1175), இராகம் – ரதிபதிப்ரியா
குகையில் நவநாதர் (திருப்புகழ் – 1016), இராகம் – கேதாரகௌளை
இயலிசையில் உசித (திருப்புகழ் – 31), இராகம் – தேஷ்
பரமகுரு நாத (திருப்புகழ் – 515), இராகம் – மத்யமாவதி
உதவி செய்த அனைவருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் பெரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்