About me

இங்கர்சால் நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். மயிலாடுதுறையில் பிறந்து கோவை குமரகுரு கல்லூரியில் பொறியியல் கல்வியை படித்துக் கடந்த 15-ஆண்டுகளாக நார்வேயில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இயந்திர திட்டப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
பொருளாதார இட ஒதுக்கீடு சரியா தவறா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். தமிழர் ஆய்வுகூடத்தில் யூடியூப் வலையொளி மூலம் சாகர்மாலா, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஒக்கி புயல், மீனவர் பாதுகாப்பு, இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ், காவேரி நீர், துப்புரவு தொழிலாளர் பாதுகாப்பு, மீனவர் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு காணொளிகளை உருவாக்கியுள்ளார்.

இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா, நாலாயிர திவ்ய பிரபந்தம், சித்தர்கள் பாடல்கள், புறநானூறு, கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார்.

இவர் வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்ற குழுவை உருவாக்கி, இணையவழியில் தன்னார்வலர்களைத் திரட்டி, நிகண்டியம் எனும் திட்டத்தின் மூலம் 300 அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை இணைத்து நாள்தோறும் சொற்களை உருவாக்கி வருகிறார். பல்வேறு சொல் அறிஞர்களின் தளத்தில் இருக்கும் சொற்களையும் திரட்டியுள்ளார். இவ்வாறாக இதுவரை 10-இலட்சம் சொற்களைச் சேகரித்துள்ளார்.

இரண்டரை இலட்சம் தமிழ் சொற்கள் இல்லாத ஆங்கில சொற்களைச் சொற்குவை அகரமுதலி திட்டத்திற்கு கொடை அளித்துள்ளார்.

கிளாஸ்பே எனும் Ai கணினி நுண்ணறிவு மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கு 4லட்சம் சொற்களைப் பரிசளித்து. தமிழ் மொழியை உலகில் கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வழியை ஏற்படுத்தியுள்ளார். இதன்வழி உலகில் எந்த மொழியினர் ஆனாலும் தமிழை ஆராய சுவைக்க வழிவகை செய்துள்ளார்.
தமிழ் கார்பஸ் எனும் 40 லட்சம் தமிழ் சொல் தகவல்களைத் திரட்டிப் பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகிறார். உதாரணமாக அதில் இருக்கும் ஊர் பெயர்கள் எவை, இலக்கிய ஊர் பெயர்கள் எவை வடுகர் ஆட்சிக்குப் பிறகு சூட்டப்பட்ட ஊர் பெயர்கள் எவை, சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட ஊர் பெயர்கள் எவை என்று பல கோணத்தில் தமிழர் தகவல்களைத் தொழில்நுட்பம் வழி ஆராய்ந்து கொண்டுள்ளார்.

டிஜிட்டல் உலகில் தமிழை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாடு அரசின் சொற்குவை அகரமுதலி திட்டத்திற்கு இரண்டரை லட்சம் தமிழ் அல்லாத ஆங்கிலச் சொல்லைக் கொடையாகக் கொடுத்துள்ளோம்

தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் – 2020 மே மாத இதழில் வெளிவந்த எனது பேட்டி.

“கணினிக்குத் தமிழ்க் கற்றுக் கொடுக்கும் இளைஞர்”
நார்வே இங்கர்சால் செல்வராஜ் செவ்வி!

தினமணியில் வந்த செய்தி குறிப்பு

திறவுகோல் தளத்தில் எனது கட்டுரைகள்

https://thiravukol.in/?s=இங்கர்சால்

கணியம் அறக்கட்டளை தளத்தில் நமது தமிழ் இலட்சனை வெளியீடுகுறித்த பதிவு

http://www.kaniyam.com/svg-vector-drawings-released-on-tamil-arts/

ஐநா சபையில் ஆற்றிய உரை

https://youtu.be/MYZ5hVIjsxE

எனது ஆய்வு நூல்கள்

https://archive.org/details/the-constitutional-103rd-amendment-bill-165-by-tamilri.-com

தமிழ்நாட்டு இடப்பெயர் ஆய்வு – ஆய்வு – தமிழன்.திரு.இங்கர்சால், நார்வே

நான் படித்த கோவை குமரகுரு கல்லூரி #Hackathon நிரலாக்க நிகழ்விற்கு நடுவராக இருந்த பரிந்துரை செய்த நிரலாக்க திட்டங்கள்.

1. தமிழ் பண்பாட்டு சார்ந்த இசைக்கலைஞர்கள், நாடகக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள் போன்றவர்களுக்கென்று தனித்த தரவுதளம் உருவாக்குதல். (Yellow Page For Tamil Artists)
2. Rags Finder – பாடல்களின் ராகங்கள் அறியும் செயலி உருவாக்க வேண்டும்.
3. நிலை 1, 2 எனபடிப்படியாகக் கலைகளைக் கற்க Pre Programmed செயலி அல்லது இணையதளம் உருவாக்க வேண்டும் (Like Roland Piano Partner).
4. மெய்நிகர் உண்மை (Virtual Reality) மூலம் வகுப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
5. எக்ஸ்பாக்ஸ் (Xbox) போன்ற கருவிகள் இயங்கும் கைனடிக் சென்சார் (Kinect Sensor) முறையில் போர்களை, யோகக்கலை, நடனம் போன்றவற்றை கற்க நிரல்கள் உருவாக்கப்பட வேண்டும்.
6. இராகப் பிரவாகம் போன்ற நூல்களில் உள்ள ஐயாயிரம் ராகங்களைச் செயலியில் உயிரோட்ட ஒளிவடிவில் உருவாக்க வேண்டும். அதனுடன் சேர்ந்து பாடினால் சரி தவறு என்று மதிப்பீடும் நுண்ணறிவு திறனுடன் உருவாக்கப்பட வேண்டும்.
7. இது எந்தப் பாடல் என்பதனை அறிய ஆங்கில பாடல்களுக்குத் தனி செயலி இருப்பதுபோலத் தமிழ் பாடல்களுக்குத் தனி செயலி உருவாக்க வேண்டும்.
8. ஓவியர்கள் சிற்பிகள் போன்றவர்கள் இருந்த இடத்தில் இருந்தே உலகத் தமிழர்களுக்கு உதவும் வகையில் தனித்த இணையதளம் உருவாக்கப்பட வேண்டும் (Like Freelancing Website)
9. கட்டிடக்கலைக்கு எளிதாகப் பயன்படுத்தக்கூடிய தமிழ் மரபு கட்டிட உருவங்கள். அதாவது வீட்டு நிலை சிற்பங்கள் போன்றவற்றை ஆர்க்கிடெக்ட் பயன்படுத்தும்படி உருவாக வேண்டும். (Centralised 3D Library for Tamil Rrchitecture)
10. Virtual Library for சிலைகள், கோவில்கள், இசைக்கருவிகள், ஓவியங்கள் உருவாக்க வேண்டும்.

முதல் தலைப்புப் பரிசு வென்றது