Valluvar Vallalar
Vasagar Vattam
🖉 கட்டுரைப் போட்டி

Va Va வா வா என்றழைக்கும் 

வள்ளுவர் வள்ளலார் வாசகர் வட்டம்

About Us

வள்ளுவர் வள்ளலார் வாசகர் வட்டம்

ஆங்கிலத்தில் ஸ்டடி சர்கில் (Study Circle) என்றழைக்கப்படும் வாசகர் வட்டமானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து வழக்கத்தில் இருக்கிறது. 


அதாவது ஒரு சிறு குழுக்களாக மக்கள் கூடி தங்களின் அறிவை வாசிப்பின் மூலமாகவும், பகிருதல் மூலமாகவும் வளர்த்து எல்லா விடயங்களையும் அலசி ஆராய்வது போன்றவற்றில் ஈடுபடுவது.


இவர்கள் பொதுவாக கிளர்ச்சி, போராட்டம் என்று இயங்கும் கூட்டமல்ல. #கல்வி, #அறிவு, #வளர்ச்சி, #தீர்வு என்று ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவது இந்த குழுக்களின் இலக்கு. 


உலகில் பல்வேறு நாடுகளில் இன்றளவிலும் பல்வேறு குழுக்கள் இதைப் போன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை நோக்கி இயங்குவதால் இந்தக் குழுக்களுக்கு அரசே மானியம் கொடுத்து வளர்க்கிறது.


இங்கு தமிழர்கள் மத்தியில் சில வாசகர் வட்டம் இருந்தாலும் அவை சிலவற்றில் மட்டுமே தேங்கி இருப்பதை நாம் காண்கிறோம். அவ்வாறான வாசகர் வட்டத்தில் நாத்திகமும், சாதி எதிர்ப்பும், திராவிடமும் ஆதரவு கருத்துக்களாக பெரிதாகப் பேசப்படுகிறது. அதே நேரத்தில் எதிர் கருத்துகளாக தமிழ் தேசியமும், ஆரியமும், இந்தியமும் பேசப்படுகிறது. 


ஒரு சமுதாயம் தனக்கான அனைத்தையும் பேச வேண்டும் ஆனால் இவை போன்ற வட்டத்தில் அவ்வாறு நடப்பதில்லை ஏன் ஆன்மீகம் பேசுவது கூட மிகவும் இயலாத காரியம். 


இந்த நிலையில் தமிழர்களுக்கென்று தனி வாசகர் வட்டம் உருவாக்க வேண்டியது இன்றியமையாதது என்று எங்களுக்கு தோன்றுகிறது. அதற்கான எங்களது இம்முயற்சி தான் வள்ளுவர் வள்ளலார் வட்டம்.


பொதுவாக தலைப்பில் சிக்கிக் கொண்டிருப்பது நமது வழக்கம். வள்ளுவர் வள்ளலார் வட்டமென்றால் திருக்குறளையும் வள்ளலாரின் போதனைகளையும் மட்டும் பேசும் வட்டம் என்ற பொதுவாக யோசிப்பது நிதர்சனம். ஆனால் இந்தத் தலைப்பு வெறும் தமிழர்களை அடையாளப்படுத்தும் குறியீடாகவே பயன்படுத்தப்படுகிறது.


வாழ்வியலில் அனைத்தையும் பேசிய வள்ளுவரையும், தனித்து ஆன்மீகம் பேசிய வள்ளலாரையும் சேர்த்து நாம் கூற காரணம். இங்கு அறம் முதல் ஆன்மிகம் வரை அனைத்தும் அடங்கும் என்பதே. 


அடுத்த 50 வருடத்தில் தமிழினம் தனது ஆற்றலில் எவ்வாறு வளர்ந்திருக்க வேண்டும் என்பதை இப்போதே தீர்வு செய்யவே இவ்வாறான தளங்கள் அவசியம் என்று எண்ணுகிறோம்.


தமிழனின் ஆதி வரலாறு முதல் ஆராய தொடங்காமல் நடப்பு காலம் முதல் முன்னோக்கிச் செல்வது திட்டம்.‌ இந்த வட்டத்தில் முன்னோக்கி பயணிப்பவர்களுக்கு முதலிடம்.


நாளைய உலகம் எப்படி இருக்கும். அந்த டிஜிட்டல் உலகத்தில் தமிழர்கள் எங்கு எப்படி இருக்க வேண்டும். என்பதையெல்லாம் தன்னைத் தானே தீர்மானித்துக் கொள்ள அறிவு பகிரும் இடமாக இருக்க வேண்டும்.


இந்த வட்டத்தில் எந்த ஒரு தனி மனிதரையோ தத்துவத்தையோ புகழ்ந்து இகழ்ந்தும் பேசுவதற்கு அனுமதி கிடையாது. இங்கு யாரும், எவர் மீதும், எதன் மீதும், வெறுப்புணர்வை உமிழ இடம் கொடுக்கப் பட போவதில்லை.


ஒரு சித்தாந்தத்தை எடுத்து பேசலாம் விவாதிக்கலாம் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம். சித்தாந்தத்தை பேசியவரை மட்டும் புகழ்ந்து பேசிக் கொண்டு இருத்தல் எந்த பயனும் அளிக்காது. ஆக இந்த தளம் முழுக்க முழுக்க கொள்கையை அதாவது சப்ஜெக்டை முன்னிறுத்தியே நகர வேண்டும்.


இப்படியாக அனைத்து துறைகளிலும் முன்னேறி சென்றவர்கள் அடுத்த தலைமுறைக்கு அவர்களது துறை சார்ந்த அறிவுகளை கடத்துவதன் மூலம் நெக்ஸ்ட் ஜெனரேஷன் பல மடங்கு அறிவாற்றலுடன் இந்த சமூகத்தை அணுகும்.


வாருங்கள் நாம் அனைவரும் சேர்ந்து அடுத்த தலைமுறையை, அனைத்து துறையிலும், பிற இனங்களுக்கு முன்னோடியாக உருவாக்குவோம்.


தமிழர் ஆய்வுக் கூடம்

Tamils Research Institute (Tamilri)

Copyright © 2009 Tamil Research Institute - All Rights Reserved.

What's something exciting your business offers? Say it here.