வள்ளுவர் வள்ளலார் வட்டம்

தமிழுக்கு தொண்டாற்ற விரும்புவர்களுக்கு வணக்கம்

தமிழில் பல சொற்கள் இருந்தும் அதில் சொற்ப சதவீதமே கணினிமயமாக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் அகராதிகள் பல இருந்தாலும் அதனை காப்புரிமை இல்லாததாக அறிவித்து கூகுள், மைக்ரோசாப்ட், போன்ற நிறுவனங்களுக்கு கொடுக்கப்படாமல் இருக்கிறது. இந்தப் பணியை அரசுதான் செய்யவேண்டும். ஆனால் அது செய்யும்படியாக இல்லை. இதனை ஒரு தமிழ் ஆசிரியர் எடுத்து செய்வதாக விருப்பம் தெரிவித்துள்ளார். அதாவது இப்போது வார்த்தைகளின் எண்ணிக்கையில் உலகளவில் 19 ஆவது இடத்தில் இருக்கும் தமிழை நான்காவது இடத்திற்கு கொண்டு வந்துவிடலாம் என்று நம்பிக்கை தருகிறார். கிட்டத்தட்ட 40 லட்சம் வார்த்தைகள் அருளி அய்யா போன்றவர்களால் ஏற்கனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனை கணினி மயமாக்குவது மட்டுமே நாம் செய்ய வேண்டிய வேலை. பல நூற்றாண்டுகளாக கடந்து வந்த தமிழ் சொற்கள் காகிதத்தோடு நிற்கிறது. அதனை கணினிக்கு எடுத்துச்செல்லும் தமிழ் பணியை செய்ய விரும்பும் உறவுகள் விருப்பம் தெரிவிக்கவும். முதற்கட்டமாக 2 லட்சம் வார்த்தைகளை டிஜிட்டலாக்க தயாராக இருக்கிறோம். இதற்கு தேவை 3 கணினிகள் மூன்று நபர்களுக்கு மாதம் ஒன்பது ஆயிரம் சம்பளம். அதனடிப்படையில் தொடங்கினால் மூன்று மாதத்தில் இதனை செய்து விடலாம். மதுரையை மையமாகக் கொண்டு இதனை செயல்படுத்த திட்டம். மற்றபடி இதனை சரி பார்ப்பது, இடம், வாடகை போன்றவற்றை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். தமிழுக்காக தொண்டு செய்ய விரும்பும் நல்ல உள்ளங்கள் அந்த ஆசிரியரை அணுகி உதவவும். இதனை உங்கள் சங்கங்கள் பெயரிலோ குழுக்கள் பெயரிலோ செய்து வெளியிடலாம் ஆனால் ஒரே வேண்டுகோள் காப்புரிமை அற்றதாக வெளியிடப்பட வேண்டும். நாங்கள் இங்கே வெறும் பாலமே. எங்களால் முடிந்ததை செய்வோம். விருப்பமிருப்பவர்கள் இந்த எண்ணுக்கு +4796700193 வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பவும். இதனை செய்து விட்டால் மொழிபெயர்ப்புகள் வருங்காலத்தில் மிகவும் எளிதாகும். கணினியில் தமிழ் அழியா பொருளாகும்.
சொற்களின் வளர்ச்சியே தமிழ் வளர்ச்சி (Please Share)
உங்களிடம் உள்ள அகராதி தொகுப்புகளை எங்களுடன் பகிர்ந்து டிஜிட்டல் உலகில் தமிழை உயர வளர்க்க உதவுங்கள். நமது நிகண்டிய குழு இதனை கணினி மயமாக்கும் பணியை தமிழுக்காக செய்ய காத்திருக்கிறது. நோட்பேட், மைக்ரோசாப்ட் வேர்டு, மைக்ரோசாப்ட் எக்செல், பிடிஎஃப் அல்லது வலைப்பதிவு எதுவாயினும் பகிரவும். பகிர்ந்து உதவுங்கள். அனைத்தையும் பொதுவுடமை ஆக்குவோம்.
PLEASE SHARE YOUR DIGITAL DICTIONARIES
valluvar.vallalar.vattam@gmail.com
நன்றி
இவண்
தமிழன்.திரு.இங்கர்சால், நார்வே
Valluvar.Vallalar.Vattam@gmail.com
(இதனை அனைவருக்கும் கிடைக்குமாறு அனைத்து நாட்டு தமிழ் சங்கங்கள், குழுக்கள், அமைப்புகள் போன்ற பக்கங்களில் பகிரவும்)