‌மாளுவ தேசம்‌

மாளுவம்‌ என்பது மத்திய இந்தியாவில்‌ விந்திய மலைக்கு வடக்கே இருந்த பண்டைய நாடு. பீடபூமி, நருமதை ஆற்று வெளியும்‌ இதில்‌ அடங்கும்‌. கி.மு. 6ஆம்‌ நூற்றாண்டில்‌ மாளவம்‌, ‘அவந்தி’ என்றபெயரால்‌ அழைக்கப்பட்டு வந்தது. உஜ்ஜயினி என்ற நகரைத்‌ தலைநகராகக்‌ கொண்டிருந்தது. மெளரிய வம்சத்தை நிறுவிய சந்திர குப்தன்‌ காலத்தில்‌ மெளரிய சாம்ராஜ்ஜியத்தின்‌ ஒருபகுதியாக விளங்கியது.
“உலக மன்ன வனின்றோன்‌ முன்ன
ரருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்‌
பெருஞ்சிறைக்‌ கோட்டம்‌ பிரிந்த மன்னரும்‌
குடகக்‌ கொங்கரும்‌ மாளுவ வேந்தரும்‌
கடல்‌ சூழிலங்கைக்‌ கயவாகு வேந்தரும்‌
எந்நாட்டங்‌ கணிமைய வரம்பனி
னன்னாட்செய்த நாளணி வேள்வியுள்‌
வந்‌தீகென்றே வணங்கினர்‌ வேண்ட” (சிலப்‌, 30/156 163)