சாத்தனார். இவர் ஐயனாரென வழங்கப்படுவர். மோகினி வடிவங் கொண்ட விஷ்ணுவைச் சிவன் கூடித் தோற்றுவித்த புத்திரனார் இவரே. இவர் அறநெறியிலிழுக்கினோரை யொறுப்பவர். இவர்க்கு வாகனம் வெள்ளையானை. பூரணையும் புட்கலையுந் தேவிமார். இவர் தற்காலத்திலே கிராமதேவதையாகப் பூசிக்கப்படுவர். இவர் செண்டாயுதமும் கருங்கடல் வண்ணமு முடையவர்