ஹரிச்சந்திரன்

இவன் சூரியவம்சத்தில் இருபத்துநான்காம் சந்ததி. இவன் திரிசங்கு புத்திரன். இவன் மனை விசந்திரதயம் புத்திரியாகிய சந்திரமதி. புத்திரன் லோகிதாசன். ஹரிச்சந்திரன் மகா உதாரசீலனும் சிறிதுந்தவறாத சத்தியவந்தனுமாக விளங்கினவன். இவனுடைய சத்திய விரதத்தை வசிஷ்டர் இந்திரன் சபையில் எடுத்துப்பாராட்டிய போது விசுவாமித்திரன் அவனைப் பொய்யனாக்குவேனென்று சபதங்கூறி இவனுடைய சத்திய விரதத்தை பரீக்ஷிக்கப் புகுந்தான். அவன் செய்த கொடிய வஞ்சப் பரீக்ஷைகளுக்கெல்லாம் இவன் சிறிதுங்கலங்காது நின்ற தன் மனைமக்களைப் பிரிந்து தானும் தான் கொண்ட சத்திய விரதத்தைக் காத்து இன்று மழியாப்புகழ் படைத்தவன்