ஹேமையென்னும் அப்சரசு புத்திரி. அநுமான் முதலியோர் சீதையைநாடிச் சென்ற போது இவளிருக்கும் காஞ்சனபிலத்திற் பிரவேசித்து வெளிப்படவியலாது திகைத்து நிற்ப இவள் அவர்களை வெளிப்படும் படி உதவி புரிந்தவள்