ஸ்ரீகண்டாசாரியர்

நீலகண்டாசாரியர். சங்கராசாரியரும் இவரும் ஒரு காலத்தவர்கள். இருவரும் ஒருமுறை சந்தித்த போது ஸ்ரீகண்டர் வினாவிய வினாக்களுக்குச் சங்கரர் விடைசொல்லாது மயங்கி நரசிங்கமூர்த்தியைத் தியானித்தனர். அம்மூர்த்தி வெளிப்பட்டு ஸ்ரீகண்டரைத் தண்டிக்க எத்தனித்தது. அது கண்டநீலகண்டர் பரமசிவத்தைத் தியானித்தனர் அப்பொழுது பரமசிவன் சரபரூபமாகியத் தோன்றி நரசிங்கத்தைக்கிழித் தெறியச்சங்கரர் ஸ்ரீகண்டரை வணங்கி, அவரிடத்துச் சிவதீக்ஷை பெற்றுச் சிவானந்தலகரி சௌந்தரியலகரி முதலியவற்றைச் செய்தாரென்பர், நீலகண்டவாசாரியர்காண்க