வேதார்த்தங்களைத் தழுவிய தருமசாஸ்திரங்கள். அவற்றுள் மனுஸ்மிருதி மிக்க பிரபலமுடையது. அது ஜகத்துச் சிருஷ்டி முதற் சகல விஷயங்களோடும் மாந்தர் தத்தம் வருணாச்சிரம தருமப்படி யொழுக வேண்டிய முறைகளெல்லாம் விரித்துரைப்பது. பிருகஸ்பதிமிருதி, தடிஸ்மிருதி, கௌதமஸ்மிருதி, யமஸ்மிருதி, ஆங்கீரசஸ்மிருதி, யாஞ்ஞவற்கியஸ்மிருதி, பிரசேதஸ்மிருதி, சாதாதபஸ்மிருதி, பராசரஸ்மிருதி, சம்வர்த்தஸ்மிருதி, ஒளசனஸ்மிருதி, சங்கஸ்மிருதி, லிகிதஸ்மிருதி, ஆத்ரேயஸ்மிருதி, ஹாரீதஸ்மிருதி என ஸ்மிருதிகள் பதினெட்டு. இவையே யன்றி உபஸ்மிருதிகளும் பதினெட்டுள. அவை கண்ணுவ ~ கபில ~ லோகித ~ தேவல ~ காத்தியாயன ~ லோகாக்ஷி ~ புத ~ சாதாதப ~ அத்திரி ~ பிரசேத ~ தடி ~ விஷ்ணு ~ விருத்தவிஷ்ணு ~ விருத்தமனு ~ தௌமிய ~ நாரத ~பௌலஸ்திய ~ உத்தராங்கித ஸ்மிருதிகள்