ஸ்காந்தம்

க. சிவபுராணங்களுளொன்று. சிவமான்மியங்களையும், ஏனைய தருமங்களையும் மிகவிஸ்தாரமாகக் கூறுவது. இஃது ஒருலடிங் கிரந்தமுடையது. உ. உபபுராணங்களுள் ஒன்று. ஸ்காந்தத்திலொருபாகமே தமிழிலே கந்தபுராண மென்னும் பெயராற் கச்சியப்பராலே மொழி பெயர்க்கப்பட்டது. கச்சியப்ப சிவாசாரியர் குமாரகோட்டத்து அர்ச்சகராயிருக்கும் போது சுப்பிரமணியக் கடவுளது ஆஞ்ஞையினாலே அதனை மொழி பெயர்த்தனர் என்பர். அஃதுண்மையேயாமென்பது அப்புராணத்துச் செய்யுள் ரீதியாலும் செபாகத்தாலும் சாஸ்திரக் கருத்துக்களின் மலிவாலும் விளங்கும்