வைதிகசமயம் மூன்றனுளொன்று. மூன்றாவன சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்பன. வைஷ்ணவம் விஷ்ணுவை முதற்கடவுளாகக் கொண்ட சமயம். இது தென்கலை வடகலை யெனயிரண்டாம். தென்கலை நாலாயிரப் பிரபந்தத்தையும் வேதபுராணங்களையும் சமமாகக் கொள்வது. வடகலை நாலாயிரப்பிரபந்தத்தை அங்ஙனங் கொள்ளாதது. ஆழ்வார்களும் ராமானுஜாசாரியருமே இச்சமயத்தை ஸ்தாபித்தவர்கள். வைஷ்ணவர்கள் விசிட்டத்துவைத சித்தாந்தக் கொள்கையினையுடையர்கள்