வைகுந்தம்

புளிங்குடி கிடந்து வரகுண மங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங் குழியாதே
என்னையாள்வாய் எனக்கருளி (நாலா-2978) என்றும்
திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய்
திரு வைவகுந்தத்துள்ளாய் (2982)
என்றும் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற தலம் இது. அமர்ந்திருக்கும் நிலையில் திருமால் கோயில் கொண்ட ஊர், இன்று ஸ்ரீவை குண்டம் என்று வழங்கப் பெறுகிறது. வைகுந்தம் என்ற பெயர் முதலில் திருமால் கோயில் பெயராக இருந்து. பின்னர், ஊர்ப் பெயராகவும் சுட்டப்பட்டது என்பதைத் தெளிவாகத் தருகிறது