வைகாவூர்

திருவைகாவூர் என்று. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. கொள்ளிடநதிக் கரைத் தலம் இது..
தாழையின் நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி
வாழை யுதிர் வீழ்கனிகள் ஊறி வயல் சேறு செயும் வைகாவிலே (329-1)
என்பது சம்பந்தர் சித்திரிக்கும் நிலை. வைகு என்பது தங்குதல் என்ற பொருளைத் தர, கா, சோலையைக் குறிக்கும் நிலை இவற்றை நோக்க, சோலைகள் சூழ்ந்த தங்குமிடம் என்ற பொருளில் இப்பெயர் தோற்றம் பெற்றிருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது.