வேளூர்

மண்‌ எனப்‌ பொருள்படும்‌ வேள்‌ என்ற சொல்‌, நில அமைப்‌பால்‌ பெற்ற பெயரோ என எண்ண இடமளிக்கிறது. நாகப்பட்டினத்துக்கு அருகே ஒரு வேளூர்‌ உண்டு, அது கீழ்‌ வேளுர்‌ என அழைக்கப்‌ பெற்று இப்பொழுது கீவளுர்‌ என சிதைந்துள்ளது.
“நல்மரம்‌ குழிஇய நனை முதிர்சாடி
பல்நாள்‌ அரித்த கோஒய்‌ உடைப்பின்‌
மயங்குமழைத்து வலையின்‌ மறுகு உடன்‌ பனிக்கும்‌
பழப்பல்‌ நெல்லின்‌ வேளூர்‌ வாயில்‌” (அகம்‌ 166:1 1)