வேல் என்ற மரப்பெயர் புணருமாறு

வேல் என்ற மரப்பெயர் அல்வழிக்கண் பெரும்பாலும் இயல்பாகப் புணரும்.(வன்கணம் இடைக்கணம் உயிர்க்கணம் இம்மூன்றும் கொள்க. மென்கணத்துள் ஞகரமகரங்கள் வருவழி லகரம் னகர மாகும்; நகரம் வருவழி லகரம் கெட நகரம்னகரமாகத் திரியும்)எ-டு : வேல்கடிது, சிறிது, தீது, பெரிது; யாது, வலிது, அழகிது;வேன் ஞான்றது, வேன் மாண்டது, வேனீண்டது.உருபுபுணர்ச்சிக்கண் அத்துச்சாரியை பெறும்.எ-டு : வேலத்தை, வேலத்தால், வேலத்துக்கண்(தொ. எ. 405, 202 நச்.)வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் நாற்கணம் வரினும் அம்முச்சாரியைபெற்றுப் புணரும்.எ-டு : வேலங்கோடு, வேலஞ்செதிள், வேலந்தோல், வேலம் பூ; வேலஞெரி,வேலநுனி, வேலமுரி; வேலவிறகு; வேலவழகு (வகரம் உடம்படுமெய்) (தொ. எ.375)