வேலூர்

வட ஆற்காடு மாவட்டம் வேலூர், அரக்கோணம், செங்கம், வாலாஜா
வட்டங்களிலும், தென் ஆற்காடு மாவட்டம் திண்டிவனம், திருக்கோவிலூர்
வட்டங்களிலும், செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம், பொன்னேரி வட்டங்களிலும்,
கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திலும், இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை வட்டத்திலும், சேலம் மாவட்டம் சேலம் வட்டத்திலும், தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் வட்டங்களிலும், திருச்சிராப்பள்ளி
மாவட்டம் பெரம்பரலூர், உடையாளர்பாளையம் வட்டங்களிலும் என பதினாறு இடங்களில்
இவ்வூர்ப்பெயர் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது. சுவடியில் காணப்படும் வேலூர் வட
ஆற்காடு மாவட்டம் வேலூர் வட்டத்தையே குறிக்கும்.  இவ்வேலூரை இராயவேலூர் என்றும் அழைப்பர்.  இராயவேலூர் என்று இவ்வூர்ப்பெயரை நினைவில்
கொண்டு பார்க்கும்போது ஒரு குழப்பத்தை உருவாக்கும் நிலை தோன்றுகிறது.  சுவடியில் “இராயவேலூர்
சைதாப்பேட்டை” (815-த) என்றிருப்பதைக் காணும்போது வட ஆற்காடு மாவட்டத்தைச்
சேர்ந்த வேலூர் எல்லைக்குட்பட்ட சைதாப்பேட்டையைக் குறிக்கின்றதா? மதுரை
மாவட்டத்தில் பெரியகுளம் வட்டத்திலுள்ள இராயவேலூர் எல்லைக்குட்பட்ட
சைதாப்பேட்டையைக் குறிக்கின்றதா? என்பது உள்ளாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட
வேண்டிய ஒன்றாகும்.