வேலூர்

சிறுபாணாற்றுப்‌ படையில்‌ குறிக்கப்‌ பெறும்‌ வேலூர்‌ என்ற இவ்வூர்‌ தென்‌ஆர்க்காடு மாவட்டத்தில்‌ திண்டிவனம்‌ வட்டத்தில்‌ கிளியனூருக்கு அருகில்‌ உள்ளது ஓய்மா நாட்டு வேலூர்‌ என்று குறிக்கப்‌ பெற்ற இவ்வூர்‌ இப்பொழுது உப்பு வேலூர்‌ என வழங்கப்‌ பெறுகிறது. (வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ள வேலுர்‌ வேறு) வேல்‌ என்ற ஒருவகை மரத்தின்‌ பெயரால்‌ வேலூர்‌ என்ற பெயர்‌ வைக்கப்‌ பெற்றிருக்கலாம்‌. அல்லது நல்லியக்கோடன்‌ தன்‌ பகையை வென்ற இடமாதலின்‌ வேலூர்‌ என்றும்‌ பெயா்‌ பெற்றிருக்கலாம்‌. (வேல்‌ என்றால்‌ பகை என்றும்‌ வெல்‌லுகை என்றும்‌ பொருள்‌ உண்டு) “நல்லியக்கோடன்‌ தன்‌ பகை மிகுதிக்கு அஞ்சி முருகனை வழிபட்ட வழி அவன்‌ இக்கேணியிற்‌ பூவை வாங்கிப்‌ பகைவரை எறியென்று கனவிற்‌ கூறி, அதிற்‌ பூவைத்‌ தன்‌ வேலாக நிருமித்த தொரு கதைகூறிற்று. இதனானே வேலூர்‌ என்று பெயராயிற்று” என்பர்‌ நச்சினார்க்கினியர்‌,
“திறல்‌ வேல்நுழியிற்‌ பூத்தகேணி
விறல்‌ வேல்வென்றி வேலூரெய்தின்‌” (பத்துப்‌. சிறுபாண்‌ 172 173)
வேலின்‌ நுனிபோல்‌ மலர்ந்த மலரையுடைய கேணி என்றும்‌, பகையை வென்ற வேலூர்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌, இவ்வாறு கொள்ளும் பொழுது நச்சினார்க்கினியா்‌ கருத்துப்‌ பொருந்துவதாகத்‌ தோன்றவில்லை.