பெயர்ப்பொருளை வேற்றுமை செய்தலால் வேற்றுமை எட்டு என்பார், இங்கேஎழுவாய்க்கும் விளிக்கும் உருபு பெயரும் பெயரின் விகாரமுமே அன்றிவேறில்லாமையால், அந்த இரண்டையும் நீக்கி, தமக்கென உருபுடையன இடை நின்றஆறு வேற்றுமையுமே ஆதலால், அவற்றின் உருபு ஆறும் தொக்கும் விரிந்தும்இடைநிற்க, அந்த ஆறோடும் பதங்கள் புணரும் புணர்ச்சியை வேற்றுமைப்புணர்ச்சி என்றார். (நன். 152 இராமா.)