வேற்றுமை இயற்கை

வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வருமொழி வன்கணம் வந்துழி, இடையேவல்லொற்று மிகுதல் வேற்றுமை இயல் பாகும்.எ-டு : உரி + குறை = உரிக் குறை; உரியும் அதில் குறைந்ததும் -என உம்மைத் தொகை.உரிக்கூறு, தொடிக்கூறு, காணிக்கூறு – முதலியனவும் இடையே வல்லொற்றுமிக்க உம்மைத்தொகைகளாம். சில அல்வழித்தொடர்கள் ‘வேற்றுமை இயற்கையாம்’என்று கூறப்படவே, அவை வேற்றுமைப்புணர்ச்சி அல்ல என்பது தெளிவாகும்.(தொ. எ. 166 நச். உரை)