வேற்றுமைப்பொருட்புணர்ச்சிசிறப்புவிதி

உருபு புணர்ச்சிக்குக் கூறியன எல்லாம் பொருட் புணர்ச்சிக்கும்ஒக்கும். உருபு தொக நிலைவருமொழிகள் வேற்றுமைப் பொருள்படப் புணர்தலின்வேற்றுமைப் பொருட்புணர்ச்சி எனப்பட்டது. அவ் இவ் உவ் – என்பனஉருபேற்குமிடத்து அற்றுச்சாரியை பெறுதல்போலப் பொருட்புணர்ச்சிக்கும்பெறும் என்றல் போல்வன. (வேற்றுமைப் பொருட்புணர்ச்சி வருமொழிபெயராயவழியே கொள்ளப்படும்.)வருமாறு : அவ் + ஐ > அவ் + அற்று + ஐ = அவற்றைஅவ் + கோடு > அவ் + அற்று + கோடு = அவற்றுக் கோடு ( ஆறன் தொகை) (நன்.238)தொல்காப்பிய வற்று நன்னூலில் அற்று எனப்படும்.