வேற்றுமையுருபு தொக நிலைமொழியும் வருமொழியும் புணரும் புணர்ச்சிவேற்றுமைப் புணர்ச்சியாம். வேற்றுமைப் பொருள்பட நிலைவருமொழிகள் இயைவதுஇது. வேற்றுமை யுருபு பெயரொடு புணரும் புணர்ச்சியும் வேற்றுமைப்புணர்ச்சியாம். வேற்றுமை யுருபுகள் விரிந்த நிலையில் உருபீற்றுநிலைமொழி வருமொழியோடு புணர்வதும் வேற்றுமைப் புணர்ச்சியே.எ-டு : கல்லெறிந்தான் – அவ் + ஐ = அவற்றை – கல்லா லெறிந்தான் -என முறையே காண்க.