தொல். ஈறுதோறும் அல்வழிப் புணர்ச்சியில் எழுவாய்த் தொடர்க்கு விதிகூறி அதே விதி வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கும் ஒக்குமாயின்‘வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே’ என்று கூறிச் செல்லும் இயல்பினர்.இந்நிலை அகர ஆகார ஈகார உகர ஊகார ஏகார ஓகார ஈறுகளுக்கு ஓதப்பட்டுள்ளது. (தொ.எ.216, 225, 252, 259, 266, 276, 292, நச்.)