திருவேற்காடு என. செங்கற்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஊர் இது. அன்று சிவன் கோயில் சிறப்பு பெற்றதாக அமைய. இன்று கருமாரியம்மன் கோயில் காரணமாகப் பெரும் புகழுடன் திகழும் ஊர். தலமரம் வேலமரம் என அறிகின்ற போது வேல மரங்களின் மிகுதி காரணமாக இப்பெயர் அமைந்துள்ளது என்பது விளக்கமாகத் தெரிகிறது. காடுவெட்டியாறு என்ற பழைய பாலாற்றங்கரையில் உள்ளது இத்தலம்.
பன்மணிகள் பொன் வரன்றி அகிலும் சந்தும்
பொருதலைக்கும் பாலிவட கரையில் நீடு
சென்னி மதி அணிந்தவர். திருவேற்காடு சென்று
அணைந்தார் திருஞான முண்ட செல்வர் (பெரிய -34-1029) என்கின்ற சேக்கிழார் பாடலும் பாலியாற்றங்கரையில் இதன் இருப்பிடத்தைச் சுட்டுகிறது. விண்டமாம் பொழில் சூழ் திரு வேற்காடு’ என்கின்ற சம்பந்தர் (58-11) தண்டலை சூழ் திருவேற் காட்டூர் (நம்பி – திருத் -38) என்ற பாடலடிகள் வேற்காட்டூரின் செழிப்பைக் காட்டுகின்றன.