வேம்பற்றூர்

வேம்பு மரத்தின்‌ பெயரால்‌ பெற்ற ஊர்ப்பெயராக இருக்கலாம்‌. வேம்பற்றூர்‌ என்ற பழம்பெயர்‌ இப்பொழுது வேம்பத்தரா்‌ என வழங்குகிறது. மதுரைக்கு வடகிழக்கில்‌ இரண்டு காதத்‌ தொலைவில்‌ வையையாற்றுக்கு வடக்கே இருக்கறது. குறுந்தொகையில்‌ 362ஆம்‌ பாடலைப்‌ பாடிய கண்ணன்‌ கூத்தன்‌ என்ற சங்ககாலப்‌ புலவரும்‌, அகநானூற்றில்‌ 157ஆம்‌ பாடலையும்‌, புறநானூற்றில்‌ 317 ஆம்‌ பாடலையும்‌ பாடிய குமரனார்‌ என்ற சங்ககாலப்‌ புலவரும்‌ இவ்வூரினர்‌.