வேதாந்தசூத்திரம்

உபநிடதங்களை யெல்லாம் ஆராய்ந்து வியாசமுனிவர் இயற்றிய சூத்திரரூபமாகிய பிரமமீமாஞ்சை வேதாந்தமெனப்படும். இஃது உத்தரமீமாஞ்சை எனவும், சாரீரகசூத்திரமெனவும், வேதாந்தசூத்திரம் எனவும்படும். இந்த வேதாந்தசூத்திரம் நான்கு அத்தியாயங்களையும், பதினாறுபாதங்களையும், நூற்றைம்பத்தாறு அதிகரணங்களையும், ஐஞ்நூற்றைம்பத்தைந்து சூத்திரங்களையும் உடையது. இரண்டாம் அத்தியாயத்திலே சாங்கிய முதலிய புறச்சமய விரோதபரிகாரமும், மூன்றா மத்தியாயத்திலே வித்தியாசாதன நிர்ணயமும், நான்கா மத்தியாயத்திலே ஞானசாதனபலமாகிப் வீடுபேறும் பேசப்படும்