சீதையினது பூர்வநாமதேயம். இவள் குசத்துவஜன் என்னும முனிக்கு மானச புத்திரியாகப் பிறந்து விஷ்ணுவுக்குத் தேவியாக வேண்டும் என்னும் அவாவோடிருக்குங் காலத்திலே தம்பன் என்னும் ராக்ஷசன் இவளைத் தனக்குப் பாரியாகத் தருமாறு குசத்துவஜனை வேண்டினன். அதற்கு அவர் உடன்படாது மறுக்க, தம்பன் அவரைக் கொன்று பிரமஹத்தியால் தானும் இறந்தான். அப்பால் இவளை ராவணன் கண்டு மோகித்துப் பலவந்தம் பண்ண அவள்கோபித்து, பாவீ! நீ என்னை அவமானம் பண்ண எத்தனித்தமையால், நான் உனது வமிசத்துக்கு நாசகாரணமாக உலகத்திலே யோனிவாய்ப்படாது பிறந்து இப்பழிதீர்ப்பே னெனக்கூறி அக்கினிப்பிரவேசஞ் செய்து அத்தேகத்தைப் போக்கினாள். அதன் பின்னர் அவள் இலங்கையிலே ஒரு தடாகத்திலே தாமரையில் ஜனித்து அழகிய சிசுவாய் விளங்க அச்சிசுவை ஏவலாளர் எடுத்துப் போய் அவன் கையிற் கொடுத்தனர். சோதிடர் அச்சிசுவால் இலங்கை அழியுமென்று கூற, இராவணன் அதனை ஒரு பேழைமிதந்து போய் மிதிலைநாட்டுத் துறையிலடைந்து மண்ணிற் புதைந்து கிடந்து ஜனகன் புத்திரகாமேட்டியாகஞ் செய்துழுத போது அவன் கைப்பட்டது. அச்சிசுவே சீதை