தேவையற்றது போன்ற ஒரு செய்தியைக் கூறி, அதனால் நூற்பாக்களில்கூறப்படாத மற்றோர் இன்றியமையாத செய்தியைப் பெறப்பட வைத்தல்.எட்டு என்ற நிலைமொழி நிறை அளவுப் பெயர்களாகிய வருமொழி வன்கணத்தொடுபுணரும்வழி, எட்டு என்பதன் ஈற்றுக் குற்றியலுகரம் மெய்யொடும் கெட்டுஈற்றயல் டகரம் ணகரமாக வன்கணத்தொடு புணரும்.எ-டு : எண் கழஞ்சு, சீரகம், தொடி, பலம்வருமொழி இயல்புகணத்தின்கண்ணும் எட்டு இவ்வாறே முடிந்துபுணரும்.எ-டு : எண்மண்டை, எண்மா; எண்வட்டி, எண்வரை; எண்ணகல்,எண்ணந்தை.எ. 144ஆம் நாற்பாவால் முன்னரே பெறப்பட்ட இதனைக் குறிப்பிட வேண்டா;குறிப்பிட்ட இவ்வேண்டா கூறலான், எண் என்பது தனிக்குறில் முன்ஒற்றாதலின், வருமொழி நிறை அளவுப் பெயர்கள் உயிர் முதலவாக வரின், எண் +அகல் = எண்ணகல், எண் + அந்தை = எண்ணந்தை – என ணகர ஒற்று இரட்டிப்புணர்தல் கொள்ளப்படுகிறது. (தொ. எ. 450 நச். உரை)உயர்திணைக்கண் ‘இ உ ஐ ஓ’ என்ற நான்கு ஈற்றுப் பெயர்களேவிளியேற்கும் என்று கூறி, அவை விளியேற்கு மாறும் கூறிப் பிறகு‘உயர்தினை மருங்கின் ஏனை உயிரே தாம்விளி கொள்ளா’ (தொ.சொ. 126 நச்.)எனவும், அஃறிணைக் கண் னரலள- என்ற நான்கு ஈற்றுப் பெயர்களேவிளியேற்கும் என்று கூறிப் பின் ‘ஏனைப் புள்ளி யீறு விளிகொள்ளா’ (தொ.சொ. 131) எனவும் கூறுவது வேண்டாகூறி வேண்டியது முடித்தல். அஃதாவதுஉயர்திணைப் பெயர்களும் விரவுப் பெயர்களும் குறிப்பிட்ட முறையானன்றிபிறவாற்றானும் விளியேற்கும் என்ற செய்தியைக் கொள்ள வைப்பதாம். மேலும்கூறிய ஈறுகளன்றி ஏனைய ஈறுகள் இருதிணைப் பெயர் களிலும்விளியேற்பனவற்றையும் கொள்ளச் செய்வதாம்.எ-டு : கணி – கணியே, கரி – கரியே; மக – மகவே; ஆடூ – ஆடூவே; மகன்- மகனே, மன்னவன் – மன்னவனே; நம்பன் – நம்பான்; வாயிலோன் – வாயிலோயே;இறைவர் – இறைவரே, திருமால் – திருமாலே, தம்முன் – தம்முனே; நம்முன் -நம்முனா; அடிகள் -அடிகேள்; பெண்டிர்- பெண்டிரோ; கேளிர் – கேளீர்; ஆய்- ஆயே; கிழவோன் – கிழவோயே; மாயோன் – மாயோயே. (தொ. சொ. 126, 131நச்.)