வேணவா:சொல்லமைப்பு

வேட்கை என்ற நிலைமொழி அவா என்ற வருமொழியொடு புணரும்வழி இறுதிக்ககரஐகாரம் கெட்டு டகரஒற்று ணகர ஒற்றாகி, வேண் +அவா =வேணவா- என்றுபுணரும். வேட்கை யாவது ஒருபொருளின்மேல் தோன்றும் பற்றுள்ளம்; அவா -அப்பொருளைப் பெறல் வேண்டும் என மேன்மேல் நிகழ் கின்ற ஆசை. வேணவா-வேட்கையான் உளதாகிய அவா – என மூன்றன் தொகை. வேட்கையும் அவாவும் எனஉம்மைத் தொகையுமாம். (தொ. எ. 288 நச்.)ஆள்- ஆண்; எள் – எண்- என இவ்வாறு ளகரமெய் ணகர மெய்யாகத் திரிதல்கூடும். வேட்கை என்பதன் முதனிலை யாகிய வேள் என்பதன் ளகரமெய்ணகரமெய்யாகத் திரிந்து நின்று அவா என்ற சொல்லொடு புணர்ந்து’ ‘வேணவா’என்றாயிற்று எனல் பொருந்தும். (எ. ஆ. பக். 148)