திருவேட்களம் என்ற பெயரில், தென் ஆர்க்காடு மாவட்டத் தில் உள்ள ஊர். சிதம்பரத்திற்குப் பக்கத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ளது என்ற எண்ணம் அமைகிறது. வேட்களம் என்ற நிலையில் பார்க்கும் போது, வேட்டையாடும் நிலை வாய்ந்த களம் என்ற பொருள் அமைகிறது. வேடர்கள் வாழ்ந்த பகுதியாக இருந்திருக்கலாம். சம்பந்தர், அப்பர் இத்தலத்து இறைவனைப் பாடிப் பரவியுள்ளனர். எனவே
திரைபுல்கு தெண்கடல் தண் கழியோதம்
தேனலங்கானலில் வண்டு பண்செய்ய
விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த
வேட்கள் நன்னகராரே திருஞான 39-4
வேட்களம் பின்னர் சிவன் கோயிலால் பெருமைபெற, இறைவன் வேடனாக வந்து அர்ச்சுனனுக்கு அருள் வழங்கினார் என்பது வரலாறு. இதனை, வேடனார் உறைவேட்களம் என்ற அப்பர் வாக்கு விளக்கும் என்ற புராணக் கதையும் பெருமை பெறுகிறது.