வேங்கடம்‌

இப்பொழுது திருப்பதி என வழங்கும்‌ ஊர்‌. மலைநாட்டு ஊர்‌. வைணவத்தலம்‌. வேங்கடம்‌ தமிழ்நாட்டின்‌ வடஎல்லையாக அமைந்திருந்தது. தொண்டை நாட்டை ஆண்ட சங்ககாலப்‌ புல்லி என்ற தலைவனின்‌ மலையாக வேங்கடத்தைச்‌ சங்க இலக்கியங்கள்‌ கூறுகின்றன. திரையன்‌ என்பவனின்‌ ஆட்சியிலும்‌ இருந்திருக்கிறது
“வட வேங்கடந்‌ தென்குமரி
ஆயிடைத்‌ தமிழ்‌ கூறும்‌ நல்லுலகம்‌” (தொல்‌,. எழுத்து. சிறப்புப்‌. 143)
“வேங்கடம்‌ பயந்தவெண்‌ கோட்டு யானை” (அகம்‌. 27 : 7)
“நறவு நொடை நெல்லின்‌ நாள்‌ மகிழ்‌ அயரும்‌
கழல்புளை திருந்தடிக்‌ களவர்‌ கோமான்‌
மழபுலம்‌ வணக்கிய மாவண்‌ புல்லி
விழவுடை விழுச்சீர்‌ வேங்கடம்‌ பெறினும்‌” (௸. 61;10 13)
“நறவுநொடை நல்லில்‌ புதவு முதற்பிணிக்கும்‌
கல்லா இளையர்‌ பெருமகன்‌ புல்லி
வியன்தலை நல்‌ நாட்டு வேங்கடம்‌ கழியினும்‌”. (ஷே. 85;8 10)
“ஈன்று நாள்‌ உலந்த மெல்‌ நடை மடப்பிடி,
கன்று பசிகளைஇய, பைங்கண்‌ யானை
முற்றா மூங்கில்‌ முளை தருபு ஊட்டும்‌
வென்வேல்‌ திரையன்‌ வேங்கட நெடுவரை”” (ஷே. 85:6 9)
“மாஅல்‌ யானை மறப்போர்ப்புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்‌”, (௸ .209;8 9)
“சுதை விரித்தன்ன பல்‌ பூ மராஅம்‌
பழை கண்டன்ன பாஅடி நோன்தாள்‌
திண்நிலை மருப்பின்‌ வயக்களிறு உரிஞூ தொறும்‌
தண்‌ மழை ஆலியின்‌ தாஅய்‌, உழவர்‌
வெண்ணெல்‌ வித்தின்‌ அறை மிசை உணங்கும்‌
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்‌” (ஷே.211:2 7)
“வினை நவில்‌ யானை விறற்போர்த்‌ தொண்டையர்‌
இன மழை தவழும்‌ ஏற்று அரு நெடுங்‌ கோட்டு
ஓங்கு வெள்ளருவி வேங்கடத்து உம்பர்‌” (௸.211:1 3)
“செந்நுதல்‌ யானை வேங்கடம்‌ தழீஇ” (௸.269:21)
“குடவர்‌ புழுக்கிய பொங்கவிழ்ப்புன்கம்‌
மதர்வை நல்லான்‌ பாலொடு பகுக்கும்‌
நிரைபல குழீஇய நெடுமொழிப்‌ புல்லி
தேன்‌ துங்கு உயர்வரை நல்நாட்டு உம்பர்‌
வேங்கடம்‌ இறந்தனர்‌ ஆயினும்‌” (௸. 393:16 20)
“சிறுநனி, ஒருவழிப்‌ படர்க என்றோனே, எந்தை,
ஒலி வெள்ளருவி வேங்கட நாடன்‌” (புறம்‌, 381;21 22)
“வேங்கட விறல்‌ வரைப்பட்ட
ஓங்கல்‌ வானத்து உறையினும்‌ பலவே” (௸, 385;11 12)
“புன்‌ தலை மடப்பிடி. இனைய, கன்றுதந்து
குன்றக நல்லூர்‌ மன்றத்துப்‌ பிணிக்கும்‌
கல்லிழி அருவி வேங்கடங்‌ கிழவோன்‌
செல்வுழி எழாஅ நல்‌ஏர்‌ முதியன்‌
ஆதனுங்கன்‌ போல” (டை.389:9 13)
“வேங்கட வரைப்பின்‌ வடபுலம்‌ பசித்தென
ஈங்கு வந்து இறுத்த என்‌ இரும்‌ பேர்‌ ஓக்கல்‌” (௸.391;7 8)