வேங்கை மரம் எனப் பொருளுடைய சொல் வெள்ளை யென்பது. வேங்கைமரங்களடர்ந்த குடியிருப்புகன் அமைந்து ஊர் வெள்ளைக்குடி எனப் பெயர் பெற்றிருக்கலாம். நற்றிணையில் 158, 196 ஆகிய பாடல்களையும், புறநானூற்றில் 35ஆம் பாடலையும் பாடிய நாகனார் என்ற புலவர் வெள்ளைக்குடியைச் சேர்ந்தவர் இவர் சோழனைப் பாடி பழஞ்செய்க் கடன் வீடு கொண்டார். (புறம் 35)