வெள்ளூர்

வெண்பூதியார்‌ என்ற சங்கசாலப்‌ புலவர்‌ இவ்வூரினரான வெள்ளூர்‌ கிழார்‌ மகனார்‌ எனத்‌ தெரிகிறது, (குறுந்‌. 219) பராந்தக நெடுஞ்செழியன்‌ (கி.பி. 768 815) வெள்ளூரில்‌ போர் புரிந்து பகைவர்களை அழித்ததாகச்‌ சீவரமங்கலச்‌ செப்பேடு கூறுகிறது. திருநெல்வேலிக்கும்‌ தூத்துக்குடிக்கும்‌ இடையில்‌ வல்ல நாட்டிற்கு அருகில்‌ வெள்ளூர்‌ இருப்பதாகக்‌ கூறுகின்றனர்‌