பாண்டியன் பெருவழுதி இங்குத் துஞ்சிய காரணத்தால் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி எனப் பெயர் பெற்றான் (புறப். 58) ஆகவே வெள்ளியம்பலம் ஓர் ஊரின் பெயராகவும் இருக்குமோ என்று எண்ண இடமளிக்கிறது. மதுரையில் கோயிலில் வெள்ளியம்பலம் என்று ஓர் அம்பலம் உண்டு. இறைவனுக்குப் பொன்னம்பலத்தோடு இந்த வெள்ளி யம்பலமும் உரியது.
“அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப்பொதியிலில்
வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தேன்”. (சிலப். பதிகம். 39 41)