திருவிடை மருதூருக்கு வடக்கே ஆறு மைலில் திருவெள்ளி யங்குடி என்ற விஷ்ணு ஸ்தலம் இருக்கிறது என்ற கருத்து ?, இது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் என்பதை உணர்த்துகிறது. இறைவனைப் பூசித்து இழந்த கண்ணைப் பெற்றதனால் திரு வெள்ளியங்குடி என்று தலம் பெயர் பெற்றது என்ற கருத்து. எவ்வாறு பொருந்துகிறது என்பது புரியவில்லை. குடி குடியிருப்பையுணர்த்துகிறது. வெள்ளி சுக்கிரனைக் குறித்து அமையினும் வெள்ளி அம்குடி சால் நிலையில் பொருத்தமுறுகிறதே தவிர. இது அடிப்படையாக இருக்குமா ? என்பது கேள்விக்குரியது. என்பது இவ்விடம் மிகவும் செழிப்பு மிக்கது என்பதை,
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்
எங்கும் ஆம் பொழில் களினடுவே
வாய்த்த நீர்பாயும் மண்ணியின் தென்பால்
திருவெள்ளியங் குடியதுவே (நாலா 1338)
துறை துறைதோறும் பொன் மணிசிதறும்
தொகுதிரை மண்ணியின் தென்பால்
செறிமணி மாடக் கொதிக்கதிரணவும்
திருவெள்ளி யங்குடி அதுவே (நாலா 1341)
போன்ற திருமங்கை ஆழ்வாரின் பாடல்கள் தெளிவாக்குகின்றன. மண்ணியாற்றின் கரையில் உள்ள இடம் இது என்பதும் தெரியவருகிறது. மேலும் இவரது பாடல் ஒன்று.
படமிறப் பாய்ந்து பன்மணி சிந்தப்
பல் நடம் பயின்றவன் கோயில்,
படவர வல்குல் பாவை நல்லார்கள்
பயிற்றிய நாடகத் தொலிபோய்,
அடைபுடை தழுவி அண்டம் நின்ற திரும்
திருவெள்ளியங்குடியதுவே (நாலா -1340) என உரைக்கிறது. எனவே இங்குக் கலைகள் சிறப்புற்றிருந்தன என்பதை உணர இயலுகிறது. இதனைக் கொண்டு நோக்க, வெள் + இயம் + குடி இப்பெயர் அமைந்திருக்குமா எனத் தோன்றுகிறது. மணற்பாங்கான தரையையுடையதும், இயங்கள் ஒலிக்கக்கூடியதுமான குடியிருப்புப் பகுதி, திருமால் கோயில் கொண்டமையால் திருவெள்ளியங்குடி என அழைக்கப் பட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.