திருமால் பெருமை கொண்ட ஊர், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ளது. திருவெள்ளறை என்று சுட்டப்படும் தலம். வெண்மையான பாறைகளாகிய ஒரு சிறு குன்றின் மேல் பெருமாள் எழுந்தருளியிருக்கின்றார் என்ற கருத்தை நோக்க ! இவ்வூர்ப்பெயரின் காரணமும் விளக்கம் பெறுகின்றது. வெண்மையான பாறை வெள்ளறை என்று சுட்டப்பட்டது. திரு மால் கோயில் சிறப்பு திரு வைத் தந்தது. இந்நிலையில் திரு வெள்ளறையாயிற்று.
மன்றில் மாம்பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போதலர்த்தி
தென்றல் மாமணம் கமழ் தர வருதிரு வெள்ளறை (நாலா -1368)
உயர் கொள் மாதவிப் போதொடு லாவிய
மாருதம் வீதியின் வாய்
திசையெல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை (1369)
என, திருமங்கையாழ்வார் இதன் செழிப்பை யுணர்த்துகிறார்.