பெருஞ்சித்திரனாராற் பாடப்பட்டோன். இச்சிற்றரசன் மிக்ககொடையுளோன். இவன் இறக்கும் போது பெருஞ்சித்திரனார்க்குப் பரிசு கொடுக்குமாறு தம்பிக்காஞ்ஞை செய்திறந்தான். அவன் கூறிய அளவிற்சிறிது கொடுப்பப் பெருஞ்சித்திரனார் கொள்ளாமற் போய்க் குமணனையடைந்த யானையும் பொன்னும் பெற்று மீண்டுபுக்கு, அவனைநோக்கி, இரப்போர்க்குக் கொடுப்பவன் நீயுமல்லை. இரப்போர்க்குக் கொடுப்பவரில்லையுமல்லர். யான் பெற்று வந்த ஊர்ப்புறத்தே கட்டியிருக்கும் யானை குமணன் தந்த பரிசில். யான் போய் வருகிறேன். என்னுங் கருத்தினையுடைய இரவலர்புரவலை நீயுமல்ல புரவலரிலவர்க்கில்லையுமல்ல ரிரவலருண்மையுங் காணினியி ரவலர்க், கீவோருண்மையங்கா ணினிநின்னூர்க், கடிமரம்வரு ந்தத்தந்தியாம்பிணித்த, நெடிநல்யானை யென்பரிசில், கடுமான் றோன்றல் செல்வல்யானே என்னும் பாடலைக் கூறிப்போயினர்