வெரிந்:புணருமாறு

வெரிந் என்ற சொல் அல்வழிக்கண் இயல்பாகப் புணரும்.எ-டு : வெரிந் கடிது சிறிது, தீது, பெரிது; ஞான்றது, மாண்டது,யாது, வலிது, அழகிது.வெரிந் உருபேற்குமிடத்து இன்சாரியை பெறும்.எ-டு : வெரிநினை, வெரிநினான், வெரிநிற்குவேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வந்துழி ஈறுகெட்டு வருமொழிவல்லெழுத்தும் அதன் இனமாகிய மெல்லெழுத்தும் மிக்குப் புணரும்.எ-டு : வெரி க் குறை, வெரி ச் சிறை, வெரி த் தலை, வெரி ப் புறம்; வெரி ங் குறை, வெரி ஞ் சிறை, வெரி ந் தலை, வெரி ம் புறம்.வெரிந் + நிறுத்த = வெரிநிறுத்த (அக. 37) வெரிந் + நிறம் =வெரிநிறம் – இருவழியும் மென்கணத்துள் நகரம் வருவழி நிலைமொழி யீற்றுநகரம் கெட்டது. (தொ. எ. 300, 301 நச்.)