வெயில் : புணருமாறு

வெயில் என்ற சொல் அல்வழிக்கண் வன்மை இடைமை உயிர்க்கணங்கள் வரின்இயல்பாகப் புணரும்.எ-டு : வெயில் கடிது, சிறிது, தீது, பெரிது; வெயில் யாது,வலிது; வெயிலடைந்தது.மென்கணத்துள் ஞகரமும் மகரமும் வருவழி நிலைமொழி யீற்று லகரம் னகரம்ஆகும்; நகரம் வருவழி லகரம் கெட, நகரம் னகரமாகத் திரியும்.எ-டு : வெயில் + ஞான்றது, மாண்டது, நீண்டது= வெயின் ஞான்றது,வெயின் மாண்டது, வெயினீண்டது. (தொ. எ. 367)உருபேற்றற்கண் வெயில் இன்சாரியை பெறாதும் பெற்றும் வரும்.எ-டு : வெயில் + ஐ = வெயிலை, வெயிலினை(தொ. எ. 202 நச். உரை)வேற்றுமைப்புணர்ச்சிக்கண், வெயில் மழை என்ற சொல் போல,அத்துச்சாரியை பெறுதலோடு இன்சாரியை பெறுதலு முண்டு.எ-டு : வெயிலத்துக் கொண்டான், வெயிலத்து ஞான்றான், வெயிலத்துவந்தான், வெயிலத்தடைந்தான்; வெயி லிற் கொண்டான், வெயிலின் ஞான்றான்,வெயிலின் வந்தான், வெயிலினடைந்தான். (தொ. எ. 377)