வெண்மணி வாயில்‌

முத்து என்ற பொருளுடையது வெண்மணி என்னும்‌ சொல்‌. மத்தி என்பவன்‌ எழினி என்பவனை வென்று அவனுடைய பல்லைப்‌ பறித்துக்‌ கொணர்ந்து கோட்டைக்‌ கதவில்‌ பதித்தான்‌. மேலும்‌ வெற்றிக்கு அடையாளமாக கடற்கரையில்‌ ஒரு கல்லையும்‌ நட்டான்‌. இச்செய்தி வெண்மணி வாயில்‌ என்னும்‌ ஊர்‌ முத்துக்‌ கிடைக்கும்‌ கடற்கரை நகரமாய்‌ இருந்திருக்கலாம்‌ என எண்ணத்‌ தோன்றுகிறது. பகைவரை அட்டு அவர்‌ பல்லைக்‌ கொணர்ந்து தமது கோட்டை வாயிற்‌ கதவில்‌ பதித்தல்‌ பண்டைய மரபு என்பதையும்‌ உணர முடிகிறது.
“குழி யிடைக்கொண்ட கன்றுடைப்‌ பெருநிரை
பிடிபடு பூசலின்‌ எய்தாது ஒழிய,
கடுஞ்சின வேந்தன்‌ ஏவலின்‌ எய்தி
நெடுஞ்சேண்‌ நாட்டில்‌ தலைத்‌ தார்ப்பட்ட
கல்லா எழினி பல்‌ எறிந்து அழுத்திய
வன்கண்‌ கதவின்‌ வெண்மணி வாயில்‌
மத்திநாட்டிய கல்கெழு பனித்துறை
நீர்‌ ஒலித்தன்ன……… “‌ (அகம்‌. 211;9 16)