வெண்ணெய் நல்லூர்

திருவெண்ணெய் நல்லூர் என்ற தலம், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் இருக்கிறது. இதனை ஆட்கொண்ட நிலைமையை வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆட்கொண்ட எனப்பாடு கின்றார் சுந்தரர் (17-11). இங்குள்ள கோயில் பெயர் திரு அருள் துறை. இதற்கு அருகாமையில் உள்ள கிராமம் மணம் தவிர்ந்த புத்தூர். இவற்றை நோக்க நல்லூர். புத்தூர் என்பன சிறப்பு அடைகள் என்பதும் புலனாகின்றன. உமாதேவி பசு வெண்ணெ யினால் கோட்டைக் கட்டி கொண்டு, அதனிடையே பஞ்ச அக் கினியை வளர்த்துத் தவம் புரிகின்றாள். அப்படித் தவம் புரிந்து பேறுபெற்ற தலம் ஆனதினாலே தான் இத்தலத்துக்கு வெண்ணெய் நல்லூர் என்று பெயர் என்ற புராணக் கதை இப்பெயர் குறித்து அமைகின்றது.
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய்
இனி அல்லேன் எனலாமே’
பெண்ணையாறு இவ்வூரை வளம் பெறச் செய்தது என்பது தெரிகிறது. வெண்ணெய் நல்லூர் கம்பனாலும் தன் புகழை மேலோங்கச் செய்தது என்பதனைக் கம்பராமாயணம் காட்டும். அண்மையில் பெண்ணையாறு இருக்கிறது என்பதை அறியும் போது பெண்ணையாற்றங்கரையில் இருக்கும் நல்லூர் ஆகை யால் பெண்ணை நல்லூர் என வழங்கப்பட்டு, பின்னர் மக்கள் வழக்கில் வெண்ணெய் நல்லூர் என்று திரிந்ததோ என்ற எண்ணம் தோன்றுகிறது.