வெண்ணி

வெண்ணி என்ற பெயரிலேயே இன்றும் தஞ்சாவூர் மாவட் டத்தில் உள்ளது. பொருநர் ஆற்றுப்படை வெண்ணிப் பறந்தலை என்ற ஊரில் கரிகாலன் வென்ற செய்தியைக் குறிப்பிடும். இங்குக் குறிப்பிடப்படும் வெண்ணியும் சோழ நாட்டு ஊர் என்ற நிலையில் இரண்டும் ஒரே ஊராக இருக்க வாய்ப்பு அமைகிறது. முன்னயை, வெண்டுறை என்ற ஊர்ப் பெயர் அமைந்தது போன்று இதுவும். வெறுந்தரையைக் குறித்து அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. இங்குள்ள ரயில் நிலையம் கோயில் வெண்ணி எனச் சுட்டப்படுவது கோயிலின் சிறப்புக்கும். செல்வாக்குக்கும் பின்னைய நிலை எனத் தோன்றுகிறது. எனவே முதலில் மண்தரையாகக் குடியேற்றம் இன்றி இருந்த வெண்ணி, போருக்கு பின்னர். குடியிருப்புப் பகுதியாகத் தோற்றம் கொண்டது எனலாம். திருஞானசம்பந்தர், தம்பாடலில்,
சடையானைச் சந்திரனொடு செங்கண்ணரா
உடையானை யுடைதலை யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர் தாம் தொழும் வெண்ணியை
உடையானை அல்லதுள் காதென துள்ளமே (150-1) என்கின்றார். சேக்கிழார். சோலை சூழ் பழுதில் சீர்த்திரு வெண்ணி (பதி -34, 358) என இதனைக் குறிப்பிடுகின்றார். திருநாவுக்கரசர், வெண்ணித் தொன்னகர் (131-2) என இதனைச் சுட்டும் நிலையும் இதன் பழமையை யுணர்த்தவல்லது.