வெறுந்தரை அல்லது மணற்பாங்கான தரை என்று பொருள் படும். வெண்ணி என்னும் அவ்வகையான நில அமைப்புப் பகுதியில் அமைந்த ஊருக்குப் பெயராயிற்று போலும். சேரனும் பாண்டியனும் கரிகாலன் இளையன் என எண்ணி, அவன் மீது போர் தொடுக்க, அவர்களுடன் போர் புரிந்து கரிகாலன் வென்ற இடமே வெண்ணி என்பது. போரில் புறப்புண் அடைந்த சேரன் வடக்கிருந்து இறந்தான் இது கோயில் வெண்ணி என்றும் கூறப்படும், இவ்வூர் ஆரூரின் அருகேயுள்ளது. கரிகாலனைப் பாடிய குயத்தியார் (புறம். 66) என்னும் புலவர் இவ்வூரினர். ஆகவே வெண்ணிக்குயத்தியார் எனப் பெயர் பெற்றார்.
“இரும்பனம் போந்தைத் தோடும், கருஞ்சினை
அரவாய் வேம்பின் அம்குழைத் தெரியலும்,
ஓங்கருஞ் சென்னி மேம்பட மிலைந்த
இருபெரு வேந்தரும் ஒருகளத்து அவிய,
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்,
கண்ணார் கண்ணி, கரிகரல் வளவன்” (பத்துப். பொருந. 143 148)
“வாளை வாளின் பிறழ நாளும்
பொய்கை நீர் நாய் வைகுதுயில் ஏற்கும்
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித்தழை
ஐதகலல்குல் அணி பெறத் தைஇ.
விழபின் செலீஇயர் வேண்டும் மன்னோ”. (நற். 390:1 6)
“கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
அழிகள மருங்கின் வாள் லடக்கிருந்தென,
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீ இயர்,
பெரும் பிறிது ஆகியாங்கு,” (அகம், 55;10 15)
“காய்சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொருகளத்து ஒழிய,
பதினொரு வேளிரோடு வேந்தர் சாய,
மொய்வலி அறுத்த ஞான்றை,
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே.” (ஷே. 2468 14)
“களிஇயல் யானைக் கரிகால் வளவ
சென்று, அமர்க்கடந்த நின்ஆற்றல் தோன்ற
வென்ஹோய்! நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்தி
புறப்புண் நாணி, வடக்கிருந் தோனே” (புறம், 66;3 8)