வெண்குன்று

வெண்குன்று” என்ற சிலப்பதிகாரத்‌ தொடருக்கு, சுவாமி மலை என்று சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர்‌ குறித்துள்‌ளார்‌. கொங்கு நாட்டில்‌ பவானி நதியும்‌ சிந்தாமணியாறும்‌ கலக்குமிடத்தில்‌ ”தவளகிரி என்னும்‌ மலையொன்றுண்டு. அங்கு முருகன்‌, கோயில்‌ கொண்டு விளங்கினார்‌ என்பது சாசனத்தால்‌. (108 of 1910) அறியப்படும்‌. வெண்குன்று என்ற தமிழ்ச்‌ சொல்லுக்கு நேரான வடமொழிப்‌ பதம்‌ தவளகரியாதலால்‌ இளங்கோவடிகள்‌ குறித்த வெண்குன்று அதுவாக இருக்கலாம்‌ என்பர்‌.
“சீர்‌ கெழு செந்திலும்‌ செங்கோடும்‌ வெண்குன்றும்‌
ஏரகமும்‌ நீங்கா இறைவன்‌ கை வேலன்தே” (சிலப்‌. 24:8 1).