திருவெண்காடு என தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. சீகாழிக்குத் தென் கிழக்கு ஏழு எட்டு மைல் தூரத்தில் இருக்கும் இடம் இது. முக்குளம், ஆல்,வில்வம், கொன்றை என்ற மூன்று தலவிருட்சங்கள் இக்கோயிலின் சிறப்பு. திருவெண்காடு என்பதும், சிவன் கோயிற் சிறப்பும். இவ்விடம் காடு சார்ந்த பகுதியாக இருந்து, பின்னர், இறைச் சிறப்பால், குடியிருப்புப் பகுதியாக மாறியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தைத் தருகிறது. சைவர்களால் பெரிதும் போற்றப்பட்ட கோயில் இது என்பதைப் பலரின் பக்திப் பாடல்கள் சுட்டுகின்றன.
விருந்தினன் ஆகி வெண்காடு அதனில்
குருந்தின் கீழ் அன்று இருந்த கொள்கையும் (திரு. கீர்த்தி- 60-61)
என மாணிக்கவாசகர் இக்கோயில் இறைவனைப் புகழ்கின்றார். திருநாவுக்கரசர்,
பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்
பரிசளித் தென் வளைகவர்ந்தார் பாவியேனை
மேக முகிலுரிஞ்சும் சோலை சூழ்ந்த
வெண்காடு மேவிய விகிர்தனாரே (249-4) எனப்பாடுகின்றார்.