வெஞ்சமாக்கூடல்

வெஞ்சமாக் கூடல் என்ற பெயரிலேயே இன்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ளது இவ்விடம். பொதுவாகக் கூடும் இடத் தைக் கூடல் என்று அழைக்கும் வழக்கினைத் தமிழர் கொண்டு இருந்தனர் என்பதைப் பிற ஊர்ப்பெயர்களும் புலப்படுத்துகின் றன. இவ்வூர்ப் பெயரும். இக்கருத்தடிப்படையில் பிறந்ததே. தாம்பிரபரணியின் உபநதியான சிற்றாறு குற்றாலத்தில் மலையின் மடுவில் விழுந்து உண்டாக்குவது பொங்குமாங்கடல். அமராவதியின் கிளைந்தி சிற்றாறு. அது அமராவதியுடன் கூடும் துறையில் உண்டான ஊரின் பெயர் வெஞ்சமாக் கூடல். இச் சிற்றாற்றைக் குடவன் ஆறு என்றும் குழகன் ஆறு என்றும் கூறுவர் என்ற எண்ணம் இவ்விடம் பற்றி இயம்பும். வெஞ்ச மன் என்ற அரசன் ஆண்டமை காரணமாக இப்பெயர் அமைந் தது என்ற எண்ணமும் உண்டு. பெரிய ஊராய்த் திகழ்ந்த வெஞ்சமாக் கூடல் இன்று சிற்றூராய்க் காட்சியளிக் கின்றது. இதன் அன்றையச் செழிப்பைச் சுந்தரர், அன்று
எறிக்கும் கதிர் வேயுதிர் முத்தமொ
டேலமிலவங்கம் தக்கோலம் இஞ்சி
செறிக்கும் புனலுட்பெய்து கொண்டு மண்டித்
திளைத் செற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக்கும் தழை மாமுடப் புன்னை ஞாழல்
குருக்கத்தி கண்மேற்குயில் கூவலறா
வெறிக்கும் கலைமா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா வடியேனையும் வேண்டுதியே
என்கின்றார். எனவே இவ்விடம் இவர் பாடல் மூலமும் சிற்றாற்றங்கரையில் அமைந்திருந்தமை தெளிவாகிறது. எனினும் கூடல் என்ற பெயருக்குரிய பொருள் விளக்கமாகிறதே அன்றி வெஞ்சமா என்ற பெயர்க்கூறுக்குரிய பொருள் விளக்கமாகவில்லை.