வீரை

கடல்‌ எனப்‌ பொருள்படும்‌ னைக என்னும்‌, கடலையடுத்த பகுதியில்‌ அமைந்த ஊருக்குப்‌ பெயராயிற்று போலும்‌. வீரை முன்‌ துறையில்‌ உப்பின்‌ நிரம்பாக்‌ குப்பை பெரும்‌ பெயற்கு உரியதாகக்‌ கூறப்பட்ட செய்தி இவ்வூர்‌, கடலையடுத்ததே என்பதை வலியுறுத்துகன்றது. புறநானூறில்‌ 320ஆம்‌ பாடலைப்‌ பாடிய வீரை வெளியனார்‌ என்ற சங்க காலப்‌ புலவர்‌ வீரைவெளி என்ற பெயருடைய ஊரைச்‌ சேர்ந்தவராகக்‌ கருதப்படுவதால்‌ வீரைவெளி என்பது தான்‌. ஊரின்‌… பெயராக இருக்கலாமோ என எண்ணத்‌ தோன்றுகிறது.
“அடு போர்‌ வேளிர்‌ வீரை முன்றுறை.
நெடுவேள்‌ உப்பின்‌ நிரம்பாக்‌ குப்பை
பெரும்பெயற்கு உருகியாஅங்கு”” (அகம்‌. 206 : 13 15)