வீரவாகுதேவர்

பார்வதியாருடைய காற்சிலம்பினின்றும் சிந்திய நவரத்தினங்களும் நவசத்திகளாகிச் சிவத்தை இச்சித்து நோக்கித் தனித்தனி ஒவ்வொரு புத்திரரை யீன்றார்கள். அவருள் முதற் சததியாகிய ரத்தினகன்னிகையீன்ற புத்திரனார் இவ்வீரவாகுதேவர். இவர் சுப்பிரமணியருடைய சேனாபதியாகிச் சூரசங்காரத்துக்கு உபகாரமாயிருந்தவர்