வீரபத்திரர்

சிவகுமாரருளொருவர். தக்ஷன் சிவனையும், உமாதேவியாரையும் அவமதித்தகாரணத்தாற் சிவன் கோபித்துத் தமது நெற்றிக் கண்ணை விழிக்க, அதினின்றும் இவ்வீரபத்திரர் தோற்றினர். வீரபத்திரர் உடனே தக்ஷன்யாகஞ் செய்கின்ற விடத்துக்குச் சென்று அவ்வியாகத்தை அழித்துத் தக்ஷனையுங் கொன்றார். அதுகண்ட தேவர்கள் சிவனைநோக்கி யாம் செய்தபிழையைப் பொறுத்தருளவேண்டு மென்று பிரார்த்திக்க அவர் தக்ஷணையாட்டுத் தலையையுடையனாக வெழுப்பியருளிப் போயினர். வீரபத்திரர் ஆயிரந்தலையும், இரண்டாயிரங்கையும், மூவாயிரம் கண்ணுமுடையவர்