வீரசோழியம் குறிப்பிடும் நகாரஎதிர்மறை உபசருக்கப் புணர்ச்சி

வடமொழிக்கண் ஒரு சொல்லிற்குரிய பொருளை நீக்குதற் பொருட்டாக,அச்சொல்லின் முன்னர் ஒரு நகாரம் வரப் பெறும். அச்சொல் மெய்முதல்மொழியாயின், அச்சொல் முன் நகாரத்தின் மேலேறி நின்ற அகரவுயிர் நிற்கமெய் கெடும். வருமொழி உயிர்முதலாயின், நகாரத்தின் மேல்நின்ற உயிர்பிரிய அது முன்னும் ஒற்றுப் பின்னுமாக நிலைமாறி (ந > ந்அ > அந்) நிற்கும்.எ-டு : ந + சத்தியம் > அ + சத்தியம் = அசத்தியம்ந + அகன் > அந் + அகன் = அநகன் (அனகன்)(சந்திப். 11)(இச்செய்தி நேமிநாதத்திலும் உள்ளது.)